News May 21, 2024
உபிக்கு சென்ற நெல்லை பாஜக வேட்பாளர்

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகள் சிலர் உத்திரபிரதேச மாநிலத்திற்கு நேற்று (மே 20) சென்றனர். அங்கு அவர்களுக்கு அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தமிழக பாஜக நிர்வாகிகள் உத்திரபிரதேசத்தில் தங்கி இருந்து பாஜக வெற்றிக்கு தேர்தல் பணியாற்ற உள்ளனர்.
Similar News
News September 16, 2025
நெல்லை உங்களுடன் ஸ்டாலின் முகாம் – கலெக்டர் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை வி.எம் சத்திரம் சண்முக மஹால், வள்ளியூர் எம்.எஸ்.மஹால், கோடீஸ்வரன் நகர் ஜெயம் மஹால், இட்ட மொழி பெருமாள் தங்கவேல் ஜெயராஜ் மண்டபம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி சமுதாயம் நலக்கூடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
News September 16, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.15) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News September 15, 2025
நெல்லை உழவர் நல சேவை மையம் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் 30 சதவீத மானியத்தில் 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த இளைஞர்கள் முன் வரலாம். தகுதியானவர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.