News August 20, 2025
“உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல”

சேலம்: சீலநாயக்கன்பட்டி, காஞ்சிநகரையைச் சேர்ந்த சேகர் (84) உடல் நலக் குறைவால் கடந்த ஆகஸ் 18-ஆம் தேதி உயிரிழந்தார். கணவர் உயிரிழந்ததை துக்கத்தில் இருந்த மனைவி யசோதா (74) பேனிக் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். கணவன் மனைவி அடுத்தடுத்த 2 தினங்களில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 26, 2026
சேலம்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

சேலம் மக்களே..உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
சேலம்: ரேஷன் அட்டையில் திருத்தமா?

சேலம் மக்களே, சக்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1)இங்கு <
2) அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3)அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4) சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452-52525 எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் “HI” அனுப்பி தெரிஞ்சுக்கலாம். (SHARE பண்ணுங்க)
News January 26, 2026
சேலத்தில் டாஸ்மாக் மது விற்பனை 20% அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 220 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் சராசரியாக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கடைகள் மூடப்படுவதால், மதுப்பிரியர்கள் நேற்று முன்தினமே மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக நேற்றைய விற்பனை வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.


