News January 11, 2025

உத்தரவை மீறி மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை

image

திருவள்ளுவர் தினத்தையொட்டி, வரும் 15ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் நேற்று (ஜன.10) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், பாா்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 9, 2025

தி.மலை: பெண் போலீசை அறைந்த ஆந்திர மக்கள்!

image

போளூர் ஸ்டேஷன் பெண் போலீஸ் மேகனா, நேற்று முன்தினம் தி.மலை கோயிலில் பணியில் இருந்தார். வரிசையில் நின்ற பக்தர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அவரை தாக்கினர். இதனால் மேகனா புகாரின்படி, ஆந்திர மாநில பக்தர்களான சரிதா, அர்சிதா, வீரேஷ், சைனீத், மாணிக்கராவ் ஆகியோர் மீது தி.மலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 9, 2025

தி.மலைக்கு வந்த அன்புமணி ராமதாஸ்

image

திருவண்ணாமலையில் மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி & அன்புமணி ராமதாஸ் சகோதரி கவிதா கணேஷ் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!