News March 27, 2025
உத்தமசோழபுரம்: கம்பம் நடுதலுடன் தொடங்கிய திருவிழா

உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள புது மாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழா பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் வெகு சிறப்பாக தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News July 10, 2025
சேலம்: 8 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் இயங்கும் கோவை – மன்னார்குடி செம்மொழி – கோவை தினசரி எக்ஸ்பிரஸ் (16616/16615), கோவை – திருப்பதி – கோவை எக்ஸ்பிரஸ் (22616/22615), கோவை – நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் (22668/22667), கோவை – ராமேஸ்வரம் – கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் (16618/16617) ஆகிய 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News July 10, 2025
சேலம் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலத்தில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், எந்தெந்த இடங்களில் நடைபெறும் எனும் அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சூரமங்கலம், எருமாபாளையம், எடப்பாடி, அயோத்தியாபட்டினம், திருமலகிரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
சேலத்தில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

சேலம்: சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் “நாட்டுக்கோழி வளர்ப்பு” என்ற தலைப்பில் 26 நாட்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி நாட்களில் விடுப்பு இல்லாமல் காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை பயிற்சி நடக்கவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 99401-78451 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும். இதை உடனே SHARE பண்ணுங்க!