News October 20, 2024

உதவித்தொகை போலி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், கல்வி உதவித்தொகை வழங்குவதாக பெயர் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை நம்பி பொதுமக்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டாம். தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். மேலும் டெபிட் கார்டு மற்றும் UPI பின் விவரங்களைப் பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் நிதி சார்ந்த சைபர் குற்றங்கள் நடந்தால் 1930 எண்ணை அழைக்கவும்.

Similar News

News August 28, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.28) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

News August 28, 2025

இராணிப்பேட்: 96 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதில் ராணிப்பேட்டையில் மட்டும் 45 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாதம் ரூ.19,850 – 96,395 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 28, 2025

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் மலர்விழி, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ராமதாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!