News December 26, 2025

உதவிக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி

image

தான்சானியாவில் உள்ள புகழ்பெற்ற கிளிமாஞ்சாரோ சிகரம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால், மருத்துவ அவசர உதவிக்காக நோயாளிகளை ஏற்றிச் சென்றபோது தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பைலட், டாக்டர், வழிகாட்டி & 2 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததை உள்ளூர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Similar News

News December 29, 2025

இன்று இரவு தூங்காதீங்க!

image

மார்கழி மாத வளர்பிறையில் வரும் சிறப்பான வைகுண்ட ஏகாதசி நாளை (டிச. 30) அனுசரிக்கப்படுகிறது. அதனால், முந்தைய நாள் இரவான இன்று இறை நம்பிக்கை உள்ளவர்கள் தூங்காமல் புராண நூல்கள் படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் பாடி பெருமாளின் சிந்தனையில் இருக்கலாம். இவ்வாறு செய்வதால், பாவங்கள் அனைத்தும் நீங்கி, வைகுண்ட பதவி கிடைக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.

News December 29, 2025

இந்த தந்தையின் இழப்புக்கு என்ன பதில்?

image

டேராடூனில் <<18703012>>திரிபுரா மாணவர்<<>> கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது சிறிய விஷயம் உத்தராகண்ட் போலீசார் FIR பதிவுசெய்ய கூட தாமதித்ததாக மாணவரின் தந்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த எங்கள் பிள்ளைகள் படிப்பு, வேலைக்காக நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்கின்றனர். ஆனால், அவர்கள் மற்ற இந்தியர்களை போல நடத்தப்படுவது இல்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

News December 29, 2025

சேலத்தில் நடைபெற்றது பொதுக்குழுவே அல்ல: பாலு

image

அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு விதிமுறைகள், <<18701469>>சேலம் பொதுக்குழுவில்<<>> மீறப்பட்டுள்ளதாக பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். ராமதாஸ் தலைமையில் நடந்தது பொதுக்குழுவே அல்ல எனவும் அவர் சாடியுள்ளார். அந்த பொதுக்குழு முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என்றும், மாமல்லபுரம் பொதுக்குழுவில் அன்புமணிக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு ECI அங்கீகாரம் தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

error: Content is protected !!