News December 8, 2024

உதயநிநி தேர்தலில் நின்று ஜெயித்தவர்

image

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. உதயநிநி தேர்தலில் நின்று வென்றவர். அவரை எப்படி பிறப்பால் முதல்வரானவர் என சொல்ல முடியும். புரோமோஷன் கூடாது என்பது உண்மை. தேர்தலில் மக்களை சந்தித்து வருபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என சொல்ல முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Similar News

News March 3, 2026

சூலூர் அருகே ஆண் சடலம்!

image

சூலூர் குளத்தின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 3, 2026

கோவையில் போக்குவரத்து மாற்றம்

image

கோனியம்மன் திருத்தேர் விழாவை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை (மார்ச்.4) காலை 10 மணி முதல், இரவு 10 மணி வரை, பேரூரில் இருந்து செட்டிவீதி ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகிறது. மாற்றாக பேரூரில் இருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே திரும்பி, பேரூர் பைப்பாஸ் ரோடு அடைந்து உக்கடம் வந்து செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

News March 3, 2026

திமுகவிற்கு தோல்வி பயம்: வானதிசீனிவாசன்

image

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்க்கும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் இருப்பதாக அவர் விமர்சித்தார்.

error: Content is protected !!