News December 15, 2025

உதயநிதி Most Dangerous என எதிரிகள் புலம்பல்: CM ஸ்டாலின்

image

உதயநிதி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மலை இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், கொள்கை எதிரிகள், DCM உதயநிதி Most Dangerous என புலம்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொள்கையில் உறுதியாக இருக்கும் உதயநிதி, இளைஞர் அணியின் கட்டமைப்பை லட்சக்கணக்கான இளைஞர்களை கொண்டு வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 19, 2025

மயிலாடுதுறை: 1,264 வழக்குகளுக்கு தீர்வு

image

மயிலாடுதுறை கோர்ட்டில் மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவர் நீதிபதி சுதா முன்னிலை வகித்தார். சிவில் வழக்குகள், குற்றவழக் குகள், மோட்டார் வாகன விபத்து கோரிக்கை தீர்ப்பாய வழக்குகள். குடும்பநல வழக்குகள் உட்பட 1,264 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடியே 40 லட்சம் தீருதவித்தொகையாக பெற்றுத்தரப்பட்டது.

News December 19, 2025

கண்களில் கருவளையமா? இதை பண்ணுங்க

image

கண்களுக்குக் கீழ் கருவளையம் ஏற்படுவதற்கு சத்துக்குறைபாடு, தூக்கமின்மை, உடலில் நீரிழப்பு போன்றவை காரணங்களாகும். இதற்கு தீர்வு காண உருளைக்கிழங்கு போதுமானது. காலையில் உருளைக்கிழங்கு ஜூஸ் குடியுங்கள் அல்லது அதன் துண்டுகளை கண்கள் மீது 30 நிமிடங்கள் வைத்திருங்கள். அதில் உள்ள நீர்ச்சத்து கண் வீக்கத்தை குறைப்பதோடு, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் வழங்குகிறது. வாரத்திற்கு 2-3 முறை இதை முயற்சிக்கலாம்.

News December 19, 2025

பொங்கல் பரிசு.. ₹3,000, + ₹10,000 ஜாக்பாட்

image

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் TN அரசு ₹3,000 – ₹5,000 வழங்க திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே தகவல் கசிந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க பிஹார் பாணியில் மகளிர் சுய தொழிலுக்காக பெண்களுக்கு ₹10,000 என்ற அறிவிப்பை வெளியிட NDA திட்டமிட்டுள்ளதாம். ஜனவரி முதல் வாரத்தில் PM மோடி (அ) அமித்ஷா இருவரில் யாரேனும் ஒருவர் TN-ல் பொங்கல் விழாவை கொண்டாட உள்ள நிலையில், அதில் இந்த அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!