News April 15, 2024

உதயநிதி ஹெலிகாப்டரை பறக்கும் படை சோதனை

image

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (ஏப். 14) ஊட்டி வந்தார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் தரையிறங்கிய, அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அதில் ஏதும் கிடைக்கவில்லை. இன்று காலை (ஏப்.15) ஆ.ராசாவுக்காக ஓட்டு கேட்டு, காபி ஹவுஸ் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

Similar News

News February 13, 2026

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

image

நீலகிரியில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி பயிற்சி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், ‘பி’ பிளாக், கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பிப்.16ம் தேதி கடைசி ஆகும்.

News February 13, 2026

கோத்தகிரியில் கூண்டோடு கைது

image

தொழிலாளர் சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 புதிய சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோத்தகிரியில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 30 பெண்கள் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 13, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!