News March 27, 2024
உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 26) திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார். அப்போது கட்டுக்கடங்காத தொண்டர்கள் கூட்டம் இருந்தது.
Similar News
News January 24, 2026
வேலூரில் கொடூரத்தின் உச்சம்…

குடியாத்தம் கொல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவரது மகன் தங்ககுருநாதன் (10). கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பூவரசனின் மனைவி பிரிந்து சென்று நிலையில் மகனுடன் வாழ்ந்து வருகிறார். படிக்காமல் விளையாடி கொண்ட மகனுக்கு தந்தை சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
வேலூர்: 16 வயது சிறுமி ஏமாற்றம்.. காமுகனுக்கு சிறை

வேலூர் அத்தியூரை சேர்ந்தவர் உதயகுமார் (26). இவர் கடந்த 2023-ம் ஆண்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் உதயகுமாரை கைது செய்தனர். இவ்வழக்கு வேலூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று உதயகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
News January 24, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-23) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


