News September 13, 2024
உதயநிதி ஸ்டாலினுடன் புதுக்கோட்டை அமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நடைபெற்று முடிந்த சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் நைட் ரேஸை வெற்றிகரமாக நடத்துவதற்கு அயராது உழைத்த அனைவரையும் கௌரவிக்கும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சேர்ந்த அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Similar News
News October 18, 2025
புதுகை: ஒரே நாளில் 650 கிலோ புகையிலை பறிமுதல்!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து புதுகை மாவட்டத்துக்கு கடத்தி செல்வதாக இலுப்பூர் போலீஸ் துணை சூப்பி ரண்டு திவ்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மொத்தம் 650 கி புகையிலை இருப்பது தெரியவர 2 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்
News October 18, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 17, 2025
புதுகை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா ?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே<