News January 25, 2026
உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் திட்டம்!

பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த மாதம் 2-வது வாரத்தில் உதயநிதி தனது பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு ஒன்றை அமைக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஓரிரு நாள்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதன் பின்னர், கடந்த தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்புகளை இழந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உதயநிதி திட்டமிட்டுள்ளாராம்.
Similar News
News February 14, 2026
தினமும் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதில் உள்ள புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. நினைவாற்றலை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பாதாம் துணைபுரிகிறது. மேலும், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது.
News February 14, 2026
உங்க சேமிப்புக்கு அதிக வட்டி வேண்டுமா? இதை படிங்க!

உங்கள் SBI வங்கி சேமிப்பு கணக்கில் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கவில்லையா? கவலைப்படாதீங்க! மல்டி ஆப்ஷன் டெபாசிட் திட்டம் (MODS) மூலம், உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள பணம் ஒரு குறிப்பிட்ட வரம்பை தாண்டினால், அது தானாகவே Fixed Deposit-க்கு மாற்றப்பட்டு, அதற்குரிய கூடுதல் வட்டி உங்களுக்கு கிடைக்கும். எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் சேமிப்பில் உள்ள பணத்திற்கு அதிக வட்டி பெறலாம்.
News February 14, 2026
9-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. கோயில் பூசாரி சிக்கினார்

தமிழகத்தில் சிறுமிகள் கர்ப்பமாகும் கொடூர சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. தருமபுரியில் அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய கோயில் பூசாரி ரமேஷ்பாபு(56) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 3 மாதமாக மாணவிக்கு அவர் தொல்லை கொடுத்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி, ஹாஸ்பிடலுக்குச் சென்றபோது உண்மை வெளிவந்துள்ளது. இந்த கொடூரனை என்ன செய்வது?


