News August 10, 2024

உதயநிதி துணை முதல்வரானால் இதுதான் நடக்கும்

image

உதயநிதிக்கு துணை முதலமைச்சராக சுபமுகூர்த்தம் குறித்து விட்டதாக தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். உதயநிதி துணை முதலமைச்சராக ஆகிய பின் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடாது, கள்ளச்சாராய ஆறு தான் ஓடும் என கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், திமுக ஆட்சி சாதிக்கவில்லை என்றும் சறுக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 24, 2025

மதுரையில் வைரலான புதிய சாலை.!

image

மதுரை காமராஜர் சாலையில் சொகுசுகார் நிறுத்திய இடத்தை தவிர்த்து, சுற்றிலும் தார் சாலை அமைத்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலங்கார் திரையரங்கம் அருகே நேற்று இரவு சாலை பணி நடைபெற்றுள்ளது. நீண்ட நேரம் காரை எடுக்காத நிலையில் மீதமுள்ள இடங்களில் மட்டும் சாலை பணி நடந்துள்ளது. இதனால் பாதியில் விடப்பட்ட சாலை பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 23, 2025

மதுரை: கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

image

மதுரை மாவட்டம், மேலூர் வண்ணம்பாறைப்பட்டியை சேர்ந்த விவசாயி கண்ணன் (25), நேற்று முன்தினம் மாலை மேலூருக்கு சென்றுவிட்டு, அவர் சொந்த ஊருக்கு டூவீலரில் திரும்பினார். அப்போது ஆட்டுக்குளம் செல்விநகர் அருகே எதிரே வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!