News January 11, 2026
உதயநிதி திமுகவின் வஜ்ர ஆயுதம்: துரைமுருகன்

கருணாநிதி, CM ஸ்டாலினை போல DCM உதயநிதியும், அயலக தமிழர் நலனுக்கு துணை நிற்பார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அயலக தமிழர் விழாவில் பேசிய அவர், CM ஸ்டாலினை சிறுவயது முதல் இப்போது வளர்ச்சி பெற்றது வரை பார்த்துள்ளதாக கூறிய அவர், உதயநிதியும் அவரது தனி பாணியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாக பாராட்டினார். உதயநிதி திமுகவுக்கு கிடைத்திருக்கிற ஒரு வஜ்ர ஆயுதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News February 14, 2026
குழந்தைகள் தானாகவே Home Work செய்யணுமா?

Home Work செய்யமாட்டேன் என உங்கள் பிள்ளைகள் அடம்பிடிக்கின்றனரா? அவர்களை வழிக்கு கொண்டு வர சில டெக்னிக்ஸ் உள்ளன. ➤Home Work செய்ய தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள் ➤அவர்களுக்கு விருப்பமான இடத்தில் படிக்க அனுமதியளியுங்கள் ➤படிக்கும் முன் விளையாடட்டும் ➤Home work-ஐ செய்து முடித்தால் பாராட்டுங்கள் ➤குழந்தைகள் அழுது அடம்பிடித்தால், விட்டுப் பிடியுங்கள், அடிக்கவோ திட்டவோ வேண்டாம். SHARE.
News February 14, 2026
பண மழையில் நனையும் 4 ராசிகள்

சுக்கிரனும், சூரிய பகவானும் நேற்று(பிப்.13) இணைந்திருப்பதால், 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *மேஷம்: வருமானம் இரட்டிப்பாகி நிதி நிலைமை மேம்படும். *மிதுனம்: எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைத்து வீடு, வாகனம், நகை வாங்கும் யோகம் உண்டாகும். *கன்னி: திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். *தனுசு: சேமிப்பு உயரும். பல வழிகளில் லாபம் பெருகும்.
News February 14, 2026
வீட்டிலிருந்தே சிவராத்திரி வழிபாடு.. எப்படி?

மகா சிவராத்திரி அன்று கோயிலுக்கு செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலிருந்தே சிவனை வழிபடலாம். இரவு சிவனை மனதில் நினைத்து, சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்யவும். இந்த நேரத்தில் பூமியை நோக்கி பாயும் கதிர் வீச்சானது நமது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், வீட்டிலிருந்தே சிவராத்திரி நன்மையை பெற முடியும்.


