News November 21, 2025
உதடு வெடிப்பை தடுக்க உதவும் வழிகள்

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, நமக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அந்த நேரத்தில், சாப்பிடுவது கூட கஷ்டமாக இருக்கும். அதை எதிர்கொள்ள, எளிமையான வழிகள் உள்ளன. அவை என்னென்ன வழிகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News November 21, 2025
ஆன்லைனில் இழந்த பணத்தை மீட்ட காவல்துறை

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கௌதம்துரை என்பவர் டெலிகிராமில் வந்த பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்ததாக இராமநாதபுரம் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்ட 3.5 லட்சம் ரூபாய் பணத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்.
News November 21, 2025
வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்? இது உங்களுக்குதான்..

வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய விதிகள் அமலாகி உள்ளன. இந்த புதிய வாடகை விதிகள் 2025, வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு இடையே வாடகையை வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை என்னென்ன விதிகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 21, 2025
நாட்டின் பகுதிகளை இழக்க தயாராகிறதா உக்ரைன்?

ரஷ்யா உடனான போரை நிறுத்த, USA உடன் இணைந்து செயல்படுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அடுத்த சில நாள்களில் இது தொடர்பாக டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், தாங்கள் முன்வைத்த பெரும்பாலான நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக USA உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். USA நிபந்தனைகளின்படி, ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள பல பகுதிகளை உக்ரைன் இழக்க நேரிடும்.


