News August 8, 2024
உதகை நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை கூட்ஸ்ஷெட் சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகள் உள்ளன. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னீரு நேற்று கிடங்குகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, தரம், எடை ஆகியவற்றை சோதனை நடத்தினார். அப்போது அவருடன் அதிகாரிகள் இருந்தனர்.
Similar News
News November 3, 2025
நீலகிரி: 10வது படித்தால் அரசு வேலை ரெடி!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News November 3, 2025
நீலகிரி: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnlgdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0423-2443962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
நீலகிரியை சேர்ந்த வாலிபர் பலி!

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் அக்பர்அலி (25). பூ வியாபாரி. இவர், குன்னூர் குமரி காட்டேஜ் பகுதியை சேர்ந்த ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று கோவை வந்தார். பின்னர், கெம்மநாயக்கன்பாளையம்- காரமடை ரோடு பூவரச மேடு அருகே குன்னூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த கழி வுநீர் அகற்றும் லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த அக்பர்அலி உயிரிழந்தார்.


