News January 15, 2026
உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு பொங்கல் விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் யுவராஜ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News January 30, 2026
நீலகிரி கலெக்டர் அதிரடி உத்தரவு

வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 1-ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான டாஸ்மாக் கடைகள் வரும் 1-ம் தேதி வடலூர் ராலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு மூட வேண்டும். இந்நாளில் உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
News January 30, 2026
மரண பயத்தில் பந்தலூர் மக்கள்

பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் மாலை இப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, இப்பகுதியில் உள்ள புலியை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News January 30, 2026
நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் (29.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


