News December 26, 2025
உதகை தலைகுந்தாவில் -2°C பதிவு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று அதிகாலை தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை -2°C ஆக குறைந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், காய்கறிப் பயிர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் மீது வெண்மையான பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.
Similar News
News December 26, 2025
நீலகிரி: காரில் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்போது சாலையோரத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் முதுமலை மசினகுடி சாலையில், சுற்றுலா பயணிகளின் காரை வழிமறித்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ தற்பொழுது சமூகவலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.
News December 26, 2025
நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <
News December 26, 2025
நீலகிரி: அச்சத்தில் பொதுமக்கள்!

பந்தலூர் அருகே கூவமூலா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆட்டை பகல் நேரத்தில் சிறுத்தை கடித்துக்கொன்றது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் இங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது, மீண்டும், குடியிருப்பு, சாலை பகுதிகளில் தினசரி சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் கோரியுள்ளனர்.


