News June 14, 2024
உதகை: சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீலகிரி மாவட்ட சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் எல்.சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மாவட்ட சிஐ டியு செயலாளர் வினோத் பொருளாளர் நவீன் சந்திரன் உள்பட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
Similar News
News March 2, 2026
நீலகிரி இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று இரவு ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர் அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.
News March 1, 2026
நீலகிரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
நீலகிரி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

நீலகிரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. நீலகிரி – 0423-2441216
2. உதகமண்டலம் – 0423-2442433
3. குன்னூர் – 0423-2206102
4. கோத்தகிரி – 04266-271718
5. கூடலூர் – 04262-261252
6. குந்தா – 0423-2508123
7. பந்தலூர் – 04262-220734
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.


