News April 17, 2024
உதகை: கல்லட்டி மலை பாதையில் விபத்து

உதகை அருகே கல்லட்டி மலை பாதையில் இன்று (17 தேதி) கார் ஒன்று வேகம் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அந்த காரில் நான்கு பேர் பயணித்த நிலையில் இரண்டு பேர் சிறு காயங்களுடன் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உதகை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் கேரளாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்தவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News April 30, 2025
நீலகிரி: கார் கண்ணாடியை உடைத்து திருட்டு!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பென்மெட்சா வெங்கட் அகில் வர்மா (26). இவர் பயிற்சிக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். காந்தல் முக்கோணம் பகுதியில் காரை நிறுத்திச் சென்று, மீண்டும் வந்து பார்த்தபோது காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு 20 பவுன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கம் திருடு போயுள்ளது. இதுகுறித்த ஊட்டி மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 29, 2025
நீலகிரி: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்!

▶️ ஊட்டி – 0423-2223808. ▶️ கேத்தி – 0423-2517558. ▶️ மஞ்சூர் – 0423-2509223. ▶️ குன்னூர் டவுன் – 0423-2221836. ▶️ அப்பர் குன்னூர் – 0423-2221300. ▶️ கோத்தகிரி – 04266-271300. ▶️ சோலூர்மட்டம் – 04266-276230. ▶️ கூடலூர் – 04262-261249. ▶️ மசினகுடி – 04232526227. ▶️ தேவர்சோலை – 04262-222234. ▶️ தேவாலா – 04262-260316. ▶️ சேரம்பாடி – 04262-266639. ▶️ நெலக்கோட்டை – 04262-222231. இதை SHARE பண்ணுங்க.
News April 29, 2025
அமைச்சரிடம் மனு அளித்த நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பந்தலூர் மருத்துவமனையில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் அன்றாடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலரும் நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர் எஸ்கேராஜ் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.