News December 11, 2025
உண்ணி காய்ச்சல் முதலில் இப்படி தான் தெரியும்

<<18527368>>உண்ணி காய்ச்சல்<<>> ஏற்பட்டால், பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு சிவப்பாக சிறிய தடிப்பு ஏற்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைவலி, காய்ச்சல் இருக்கும். ஆரம்பத்தில் கண்டறியாமல் விட்டால், பூச்சி கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் செயலிழந்து கோமா, மரணம் கூட ஏற்படக்கூடும். எனவே காய்ச்சல் மற்றும் தடிப்புகள் ஏற்பட்டால் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 26, 2026
USA, இஸ்ரேலுக்கு கொடுத்த பதிலடியை பட்டியலிட்ட ஈரான்

இஸ்ரேல், அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தற்போதுவரை 700 ஏவுகணைகளை வீசியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், 3,600 ட்ரோன்களை ஏவி தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அமெரிக்கா, இஸ்ரேலின் 200 ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக குறிப்பிட்ட ஈரான், இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைஃபா நகரங்களை தரைமட்டமாக்கி விடுவோம் என எச்சரித்துள்ளது. போர் முடிவுக்கு வருமா?
News March 26, 2026
கரசாமியின் செல்லியாக மமிதா பைஜு.. VIRAL PHOTOS!

பிரேமலு, டூட் படங்களில் ஜாலியான கேரக்டரில் கலக்கிய மமிதா பைஜு, தனுஷின் ‘கர’ படத்தில் சீரியஸான கேரக்டரில் நடித்திருக்கிறார். செல்லி என்ற அவரது கேரக்டரின் அறிமுக போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் ‘கர’ படம் ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கருணாஸ், சூரஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
News March 26, 2026
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது

மஹாவீர் ஜெயந்தியையொட்டி மார்ச் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் உத்தரவை மீறி கடையை திறந்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT


