News May 14, 2024

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

image

ராமநாதபுரம் பட்டணம்காத்தான்
இசிஆர் பகுதிகளில் மாலை நேர தள்ளுவண்டி கடைகள், வாகனங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் சுகாதார மின்றி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் இப்பகுதிகளில் உள்ள அசைவ உணவு கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருட்களில் அதிக நிறமி சேர்த்த அரை கிலோ சிக்கன் வகைகள், கால் கிலோ அஜினமோட்டோ பறிமுதல் செய்து அழித்தனர்.

Similar News

News November 20, 2024

மாலை 4 மணி நிலவரப்படி 1,641 மிமீ மழை பொழிவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6  மணி முதல் மாலை 4 வரை ராமேஸ்வரம் 411, தங்கச்சிமடம் 322, மண்டபம் 261, பாம்பன் 237, ராமநாதபுரம் 75, கடலாடி 71.20, வட்டாணம் 65.60, முதுகுளத்தூர் 48.20, கமுதி 45.80, பள்ளமோர்குளம் 45. 20, பரமக்குடி 25.60, திருவாடானை 11.80 என மாவட்டம் முழுவதும் 1,641.80 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் இருந்த குடிசைகளை மழை நீர் முழுவதுமாக சூழ்ந்தது.

News November 20, 2024

பாம்பனில் மேக வெடிப்பால் மிக கனமழை

image

ராம்நாடு மாவட்டம் பாம்பனில் மிகக்குறுகிய இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக கனமழை பெய்துள்ளது. மேகவெடிப்பால் பகல் 11.30 மணி முதல் 2.30 மணி வரை பாம்பனில் 19 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மிக குறுகிய இடத்தில் வலுவான மேக கூட்டங்களால் மேக வெடிப்பு நிகழ்ந்து கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 20, 2024

ராமநாதபுரத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நாளை காலை 9 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் ராமநாதபுரத்தில் அதிகனமழைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.