News April 5, 2025
உணவு ஆர்டர் பெயரில் மோசடி.. போலீஸ் எச்சரிக்கை

இணையதளங்களில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், தாங்கள் ஆர்டர் செய்யாத உணவு, தங்களுக்கு வந்திருப்பதாக கூறி அதை திருப்பி அனுப்ப OTP கேட்கும் நபர்களிடம் எந்த விபரமும் தெரிவிக்க வேண்டாம் என்று மதுரை மாநகர் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News April 6, 2025
மதுரையில் மர்மமான முறையில் ரயில்வே போலீஸ் உயிரிழப்பு

மதுரை கூடல்புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோபி (45). இவர் ரயில்வே போலீசாரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும் முதுகுதண்டுவட பிரச்சனையும் இருந்துள்ளது. இந்நிலையில், மனைவி பிரியா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட காரில் கோபி இறந்து கிடந்துள்ளார். மனைவி புகாரில் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2025
மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை முதல் போக்குவரத்து தடை மற்றும் மாற்றம் செய்துள்ளது. மதுரை விமான நிலையம் முழுவதும் (அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர), மண்டேலா நகர் சந்திப்பிலிருந்து விரகனுார் ரவுண்டானா சந்திப்பு வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விரகனுார் ரிங்ரோடு, மண்டேலா நகர், அருப்புக்கோட்டை சாலைகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றம்.SHARE IT.
News April 6, 2025
மதுரை அருகே மாடி வீடே இல்லாத வினோத கிராமம்

நாகரீகம் வளர்ந்து வரும் நவீன காலத்தில்மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்று மதுரை மாவட்டத்தில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்
சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர் கிராமத்தினர்.