News April 24, 2024
உடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

நாகை அடுத்த வாய்மேடு உடைய அய்யனார் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 20ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜை நிறைவு பெற்று மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பட்டு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Similar News
News September 26, 2025
நாகை: இதை செய்தால் கரண்ட் Bill வராது!

நாகை மக்களே, உங்களது வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு (Solar Panel) பொருத்துவதன் மூலம் மாதம் ரூ.2,000-3,000 வரை மின்கட்டணத்தை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<
News September 26, 2025
நாகை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே பொதுமக்கள் இயற்கை பேரிடர் கோரிக்கை 04365-1077 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE NOW !
News September 26, 2025
நாகை: வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

நாகை மாவட்டம் முழுவதும் குறுவை பருவத்துக்காக 95 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், வெளி மாவட்ட நெல்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆகாஷ் எச்சரித்துள்ளார். SHARE NOW!