News December 7, 2024
உடைந்த குவி கண்ணாடிகளை மாற்ற கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் ஆபத்து நிறைந்த இடங்களை கண்டறிந்து கடந்த 2020ஆம் ஆண்டு நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, குவி கண்ணாடிகள் பொருத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த கண்ணாடிகள் பல இடங்களில் சேதமடைந்துள்ள. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News August 19, 2025
நீலகிரி: உங்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு!

நீலகிரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
♦️ஆக.20ஆம் தேதி- கோத்தகிரி வட்டாரம், சமுதாய கூடம் வள்ளுவர் நகர்.
♦️ஆக.21ஆம் தேதி முதல் உதகை மண்டலம் நகராட்சி, தேவாங்கர் திருமண மண்டபம் உதகை.
♦️நடுவட்டம் பேருராட்சி, சமுதாய கூடம் பஞ்சாயத்து காலனி.
♦️கோத்தகிரி வட்டாரம், சமுதாய கூடம் கப்பட்டி.
♦️உதகை மண்டலம் வட்டாரம், சமுதாய கூடம் நேரு நகர்.
ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. SHARE பண்ணுங்க மக்களே.!
News August 19, 2025
நீலகிரி: மசினகுடி சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலை கார்குடி பகுதியில் ஒரு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி எதிரில் இருந்த ரிவைடர் கம்பியை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. வாகன ஓட்டுனருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை மேலும் பொக்லின் இயந்திரம் மூலம் வாகனத்தில் மீட்கப்பட்டதால் சிறிது நேரம் மைசூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
News August 18, 2025
நீலகிரி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் நாளை (19.08.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் குஞ்சப்பனை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு, போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இசேவை, ஆதார் சேவை, மருத்துவ சேவை என அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க உள்ளதால் இப்பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு நீலகிரி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.