News July 19, 2024
உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு

உடுமலை வழியாக மேட்டுப்பாளையம் தூத்துக்குடி வரை வாரம் இருமுறை இன்று முதல் விரைவு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு இரவு 10 மணிக்கு வரும். அதேபோல, தூத்துக்குடியில் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:30 மணி அளவில் உடுமலை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 17, 2025
திருப்பூரில் அரசு வேலை: நல்ல சம்பளம் APPLY NOW!

திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 67 செவிலியர் பணியிடங்கள், மாவட்ட நலச்சங்கம் மூலம் நிரப்பப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நாளை (ஆக.18) மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.<
News August 17, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவரிடம் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தியாகு என்பவர் பாலியல் ரீதியாக துன்பறுத்தி, வெளியே சொல்ல கூடாது என சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். புகாரின் பேரில் தியாகு (24) அவரது மனைவி ரஞ்சிதா (22) அவரது தாய் மற்றும் ஜெயந்தி (45) ஆகியோர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
News August 17, 2025
குறைந்த விலையில் மல்பெரி மரக்கன்றுகள் வேண்டுமா?

திருப்பூர் விவசாயிகளே பட்டு வளர்ச்சித் துறையின் அரசுப் பண்ணைகளில் மல்பெரி மரக்கன்றுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. உடுமலைப்பேட்டையில் உள்ள “பார்மர்ஸ் டிரைனிங் சென்டர்” – மைவாடி-யில், இருப்பு வைக்கப்பட்டுள்ள 25,000 V1 ரக மல்பெரி கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், அதிகாரி கண்ணன் அவர்களை 87786 97224 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.