News March 23, 2025
உடுமலை: உணவகத்தில் 24 மணி நேரம் மது விற்பனை

திருப்பூர் உடுமலை யூனியன் ஆபீஸ் அருகில் உள்ள உணவகத்தில் 24 மணி நேரமும் முறைகேடாக மதுக்கடை அமைத்து மது விற்பனை நடைபெற்று வருகின்றது. காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் நகராட்சி பகுதியில் அர்பன் வங்கி அனுஷம் திரையரங்கம் பின்புறம் பஸ் நிலையம் ராஜேந்திர ரோடு பகுதியில் பேரணி முறைகேடாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
Similar News
News March 25, 2025
அமைச்சரை சந்தித்த நகர மன்ற தலைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் இன்று சென்னையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் கே.என்.நேருவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இன்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
News March 25, 2025
திருப்பூர்: பனியன் நகருக்கு வந்த சோதனை

பனியன் தொழில் மாநகரமான திருப்பூரில் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசே தடை விதித்திருந்தாலும் கூட, பல்வேறு பகுதிகளில் தடை இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை பயன்பாடு முடிந்த பிறகு குப்பைகளில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
News March 25, 2025
திருப்பூரில் வீட்டில் விபச்சாரம்: புரோக்கர் கைது

திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த நஞ்சப்பா நகர் பகுதியில் வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் வைத்து விபச்சாரம் நடத்தியதாக சாரதி என்ற புரோக்கரை கைது செய்தனர். இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.