News October 27, 2025
உடுமலை அருகே ரயில் மீது மோதி முதியவர் தற்கொலை

திருப்பூர் உடுமலை அருகே கோவையில் இருந்து மதுரைக்கு செல்லும் பயணிகள் ரயில் கோமங்கலம் பகுதியில் வந்த போது திடீரென முதியோர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்தார் இந்த விபத்தில் ரயில் மோதி தூக்கி எறியப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட முதியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News October 27, 2025
திருப்பர்: ரயில்வேயில் வேலை! APPLY NOW

ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்த 18- 33 வயதுடையவர்கள் https://www.rrbchennai.gov.in/என்ற இணையதளத்தில் நவ.11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News October 27, 2025
வைட்டமின்-ஏ திரவம் இன்று முதல் வழங்கல்

திருப்பூர் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று அக்.27 முதல் நவ.1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 14 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் முகாம் நடைபெறும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் இரவு நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இன்றைய தினம் நல்லூர் சரக உதவி ஆணையர் தையல்நாயகி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் நிலையில், ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.


