News March 5, 2026

உடுமலையில் சத்யராஜ் மகள் போட்டியா?

image

2026 சட்டமன்றத் தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் விருப்பமனு அளித்துள்ளார். உடுமலைப் பகுதியோடு குடும்ப ரீதியான நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், தற்போது தீவிர அரசியலில் இறங்கியிருப்பது அத்தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Similar News

News March 6, 2026

காங்கேயத்தில் மீண்டும் போட்டியா?

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் விருப்ப மனு தாக்கல் செய்தார். திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் தொகுதியில் போட்டியிட அவர் மனு அளித்தார். இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகிகள், கட்சிப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

News March 6, 2026

உடுமலை அருகே கோர விபத்து: 3 பேர் பலி

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோணி பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக எதிரெதிரே மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த சிறுவன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 6, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

கோடைக்காலத்தை எதிர்கொள்ள ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிலத்தடி நீர் உயர நடவடிக்கை எடுக்கவும், பல்லடம் 4 வழிச்சாலை பணியில் சேதமான குடிநீர் குழாய்களை உடனே மாற்றவும், கிணறுகள்-நீர்நிலைகளை தூர்வாரி பழுதான குழாய் இணைப்புகளை சரிசெய்யவும் உத்தரவிட்டார்

error: Content is protected !!