News February 13, 2026
உடல் எனர்ஜிக்கு காலையில் இந்த 6 உணவுகள்தான் பெஸ்ட்!

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டால், அதற்கு முதலில் உங்கள் உடலுக்கு எனர்ஜி வேண்டும். காலையில் எழுந்ததும் முதல் வேளையாக இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் அந்த நாள் முழுவதும் நீங்கள் எனர்ஜியுடன் இருக்க முடியும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது புறமாக Swipe செய்யவும். நீங்க மட்டும் தெரிஞ்சிக்காம உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 18, 2026
காதலர் தினத்தில் அதிகம் விற்ற ஆணுறைகள்..

காதல் என்பதன் பரிமாணம் மாறி வருகிறது போலும். கடந்த பிப்.7- 14 வரையான காதலர் தின வாரத்தில், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பூக்களை விட ஆணுறைகள் மற்றும் பிற செக்ஸ் தயாரிப்புகளை தான் மக்கள் அதிகம் ஆர்டர் செய்தனராம். குயிக் காமர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதில் பெங்களுரு, கொல்கத்தா, டெல்லி நகரங்கள் முன்னிலையில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக தான் சாக்லேட்கள், டெட்டி பொம்மைகளை ஆர்டர் செய்துள்ளனர்.
News February 18, 2026
மா.சுப்பிரமணியன் பேச்சால் ஆவேசமான EPS

7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டுவர வலியுறுத்தியது திமுக தான் என அமைச்சர் மா.சு பேசினார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய EPS, விளம்பரம் தேடும் செயலில் TN அரசு ஈடுபடுவதாகவும், 7.5% இடஒதுக்கீட்டுக்காக போராடிய ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா எனவும் சாடியுள்ளார்.
News February 18, 2026
அதிமுகவில் அந்த 2 இடம் யாருக்கு?

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. பேரவையில் அதிமுக(62), பாமக(5), பாஜக(4) நிலவரப்படி அதிமுகவுக்கு 2 MP-க்கள் கிடைக்கும். இதில், தம்பிதுரை தனக்கு மீண்டும் சீட்டு கேட்கிறாராம். அதேபோல், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக(அன்புமணி), ஒருவேளை கூட்டணிக்கு வந்தால் தேமுதிகவும் ஒரு MP சீட்டை கேட்கிறதாம்.


