News November 16, 2024
உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு

மத்தூர் அருகே மாதம்பதி பகுதியை சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி (65). சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த டூவீலர் மோதி சின்னத்தம்பி படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கோட்ட வருவாய் ஆய்வாளர் ஷாஜகான், போச்சம்பள்ளி வட்டாச்சியர் சத்தியா, சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் ஆகியோர் சின்னத்தம்பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News March 1, 2026
கிருஷ்ணகிரி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
News March 1, 2026
கிருஷ்ணகிரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
ஓசூர்: சாதனைகளை அள்ளி தெளித்த MLA!

ஒசூா்: திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ”ஒசூரில் ரூ.100 கோடியில் தலைமை மருத்துவமனை, ரூ.550 கோடியில் சாக்கடை திட்டம், ரூ.50 கோடியில் பேருந்து நிலையம், ரூ.250 கோடியில் சாலைகளை 4 வழிச்சாலைகளாக தரம் உயா்த்தியது உள்ளிட்ட ரூ.3000 கோடி வளா்ச்சித் திட்டப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன” எனக் கூறியுள்ளார்.


