News December 24, 2025
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் பழங்கள்

உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், நாள் முழுவதும் அவதியாக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் ஊட்டச்சத்து குறைபாடே, உடல் ஆரோக்கியம் பாதிப்படைய காரணமாக அமைகிறது. இதனை, பழங்கள் மூலம் எளிதாக சரிசெய்யலாம். அவை என்னென்ன பழங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் ஏதாவது ஒரு பழத்தை தினமும் சாப்பிடுவது சிறந்தது. SHARE.
Similar News
News December 25, 2025
PAK பெண்ணின் திருமண ஆஃபர்.. வாஜ்பாயின் Thuglife!

மறைந்த EX PM வாஜ்பாயின் 101 பிறந்தநாள் நிகழ்வில், அவரை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை ராஜ்நாத் சிங் பகிர்ந்துள்ளார். 1999 பிப்ரவரியில் வாஜ்பாய் லாகூருக்கு பஸ்ஸில் பயணித்தார். அப்போது, ‘என்னை மணந்து, அதற்கு ஈடாக காஷ்மீரை தருவீர்களா’ என ஒரு பாக்., பெண்மணி கேட்டார். அதற்கு சரியென்ற வாஜ்பாய், வரதட்சணையாக பாக்.,ஐ கேட்டு அதிரச்செய்தார். இது அவரது ராஜதந்திரத்தை பிரதிபலிப்பதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
News December 25, 2025
இடியாப்பத்திற்கு வந்த இடியாப்ப சிக்கல்!

சைக்கிள் மற்றும் பைக்கில் இடியாப்பம் விற்பவர்கள் உரிமம் பெறுவது கட்டாயம் என தமிழக உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இடியாப்பத்தை முறையாக தயாரிக்காமல் விற்பதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிப்பது கட்டாயம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
News December 25, 2025
உலகப்போரை நிறுத்திய கிறிஸ்துமஸ் பெருவிழா!

1914-ல் முதல் உலகப்போரில் ஜெர்மன்-பிரிட்டிஷ் வீரர்கள் கடுமையாக போரிட்டு கொண்டிருந்த சமயம். டிச., 24-ம் தேதி இரவு, ஜெர்மன் பகுதியில் துப்பாக்கி சத்தத்திற்கு பதிலாக, இனிய கிறிஸ்துமஸ் கீதம் ஒலித்தது. மறுநாள் களத்தில் இருந்த இருநாட்டு வீரர்களும் உணவுகளை பரிமாறி ஃபுட்பால் விளையாடினர். தளபதிகளின் உத்தரவு இல்லாமல் நிகழ்ந்த இந்த ஒருநாள் போர் நிறுத்தம், மனிதநேயத்தின் சாட்சியாக வரலாற்றில் நீடிக்கிறது.


