News May 1, 2024
உடல்கள் அடையாம் காணப்பட்டது

காரியாபட்டி, ஆவியூர் கல்குவாரியில் இன்று இறக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் வெடிபொருள் கொண்டு வரப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் கந்தசாமி, துரை, குருசாமி, என்ற 3 பேர் உயிரிழந்தனர். அதில் இருவர் ராஜபாளையம் எனவும், மற்றொருவர் மதுரை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வெடிபொருட்கள் முழுமையாக வெடிக்காமல் சிதறி கிடப்பதால் மீண்டும் வெடிக்கக்கூடும் என்பதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் ஏப் 21 முதல் ஏப் 23 வரை 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4-ம் தேதி அன்று அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடுவதற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார். எனவே விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 8, 2026
விருதுநகர்: கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

விருதுநகர் மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். SHARE IT