News May 7, 2025
உடன்குடி அருகே கார் விபத்தில் மாணவர் பலி

திசையன்விளை கரைச்சுத்துபுதூர் சாய்ராம்(18), பிளஸ் டூ மாணவரான இவர் தன் உறவினர் சிலருடன் திருச்செந்தூரில் ஒரு திருமணத்திற்காக நேற்று காரில் வந்துள்ளார். கார் உடன்குடி சமாதானபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சாய்ராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 14, 2025
தூத்துக்குடியில் அரசு வேலைக்கு நீங்கள் ரெடியா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சாகர் மித்ரா சேவை ஊழியர்கள் பல்வேறு கிராமங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி 35 வயது நிறைவடையாத மீன்வளம் மற்றும் கடல் உயிரினம், விலங்கியல் பாடத்தில் பட்டப் படிப்பு படித்த வாலிபர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மீன்வளத்துறை உதவி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 13, 2025
தூத்துக்குடி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0461 2340522 அணுகலாம். SHARE பண்ணுங்க


