News January 31, 2025

உடனடி நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியர்

image

கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமராக்கியைச் சேர்ந்த கருப்பாயி என்ற மூதாட்டி அளித்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுரையின்படி மூதாட்டிக்கு UDID அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளப்பட்டும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால் வழங்குவதற்கு ஏதுவாக அளவீடு பணிகள் இன்று (ஜன.31) மேற்கொள்ளப்பட்டது.

Similar News

News March 2, 2026

மதுரை – சிவகங்கை நேரடி ரயில் (மார்ச் மாதம் முழுவதும்)

image

சிவகங்கை: ரயில் எண், 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை முன்பதிவு இல்லாத விரைவு ரயில் மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக
நாளை, மார்ச் 3 முதல் மார்ச் 31 வரை (புதன் தவிர) மற்ற நாட்களில் மானாமதுரை, சிவகங்கை வழியாக இயங்கும். தொடர்ந்து இந்த ரயில் மயிலாடுதுறை வரை செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

News March 2, 2026

சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

News March 2, 2026

சிவகங்கை: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி.!

image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மறவர் தெருவை சேர்ந்தவர் பந்தல் தொழிலாளி சரவணன் (வயது 47). இவர் தனது உறவினர் வீட்டின் மாடிக்கு சென்ற போது, மின்கம்பி உரசியதில் காயமடைந்தார். இவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!