News February 23, 2026
உடனடியாக பணி நியமன ஆணை.. அன்புமணி ராமதாஸ்

சுகாதார ஆய்வாளர்கள், கூட்டுறவுத் துறை உதவியாளர்கள் பணிக்கு தகுதியான 4,010 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக X-ல் அவர், நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டும் தமிழக அரசு உடனடியாக சென்னை HC-ஐ அணுகி பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, உடனடியாக ஆணைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News February 25, 2026
அரசியல் கட்சியினரால் போற்றப்பட்ட நல்லகண்ணு

பொதுவாக எந்த ஒரு அரசியல் தலைவர் மீதும் பிற கட்சி தலைவர்கள் கடுமையான விமர்சனங்கள் வைப்பது உண்டு. ஆனால், எளிமையின் சிகரமாக அறியப்படும் நல்லகண்ணு அனைவரின் பாராட்டையும் பெற்ற தலைவராகவே வாழ்ந்தார். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாதக என பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போற்றிப் புகழ்ந்துள்ளனர். குறிப்பாக, 1999 MP தேர்தலில் நல்லகண்ணுவை தோற்கடித்ததற்காக, சி.பி.ராதாகிருஷ்ணன் வருந்தியிருந்தார்.
News February 25, 2026
பொன்முடி நேரில் ஆஜராக சம்மன்!

தேர்தல் நெருங்கும் வேளையில், திமுகவுக்கு அடுத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. <<16061646>>சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில்<<>> பொன்முடி மீது FIR பதிவு செய்யக்கோரி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தொடர்ந்த வழக்கில், MP, MLA-க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் மார்ச் 24-ம் தேதி அவர் கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 25, 2026
இளம் வாக்காளர்களை ஈர்க்கும் தவெக: கிரிஷ் சோடங்கர்

தவெகவை மக்களை ஏற்கிறார்களா, இல்லையா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியவரும் என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தனக்கு வரும் தரவுகளின் அடிப்படையில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் இளைஞர்கள் தவெகவால் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், இது தங்களது கவனத்தை பெற்றிருப்பதாகவும் கூறினார். இத்தகைய பேச்சுகள் மூலம் தவெகவுடனான கூட்டணி ஆப்ஷனையும் காங்கிரஸ் வைத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


