News December 15, 2025

உச்சம் தொட்ட முட்டை விலை

image

முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இரவு நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ₹6.25-ஆக உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை அதிகரித்ததால் , சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சில்லறை வணிகத்தில் ஒரு முட்டை ₹7 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News December 19, 2025

விலை ₹11,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

பைக் வாங்க போறீங்களா? இந்த டிசம்பர் மாதத்தில், பல்வேறு பைக்குகளுக்கு ஆண்டு இறுதி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ₹11,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் பைக்குகளுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 19, 2025

5 நிமிடம் வாக்கிங்… இவ்வளவு நன்மைகள் இருக்கு!

image

தினமும் நடைபயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால், அதற்கு நேரமில்லாதவர்கள் அலுவலகத்தில் கூட ட்ரை பண்ணலாம். ஆம், நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்காராமல், 1 hrs-க்கு ஒருமுறை சுமார் 5 mins நடக்கவேண்டும். அப்படி செய்தால், *மெட்டபாலிசம் மேம்பட்டு கொழுப்பு சேராமல் தடுக்கலாம் *ரத்த ஓட்டம் மேம்படும் *சோர்வு நீங்கி, ஆற்றல் அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

News December 19, 2025

பள்ளி மாணவி கர்ப்பம்.. அதிரடி தண்டனை

image

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கொடூரனுக்கு, தேனி போக்சோ கோர்ட் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2020 முதல் மாணவியை காதலித்து வந்த இளைஞருக்கு 2022-ல் வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. இருப்பினும், பெற்றோரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளான். அதில் மாணவி கர்ப்பமாக, அந்த நிலையிலும் பலாத்காரம் செய்திருக்கிறான் இந்த கொடூரன். இவனை என்ன செய்வது?

error: Content is protected !!