News March 17, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாட்டால் வறண்ட விழித்திரை, மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு சேலத்தில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை 5வயது வரை உள்ள 2,62,674 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் உள்ள ஆரம்ப,துணை மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படும். இதை குழந்தை வைத்துள்ள மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். 

Similar News

News July 9, 2025

சேலத்தில் கிராம உதவியாளர் வேலை!

image

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.11,100 -35,100 வரை வழங்கப்படும். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணபங்களை பதிவிறக்கம் செய்து,அதனை உங்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். இதனை உடனே ஷேர் செய்யுங்கள்.

News July 9, 2025

சேலம் ஜூலை 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் ஜூலை 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 9 மணி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய மருத்துவ சங்கத்தினர் 5 ரோட்டில் ஆர்ப்பாட்டம்▶️ காலை 10 மணி 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ▶️காலை 11 மணி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம்

News July 9, 2025

ஆத்துார் அருகே பிறந்த 18 நாளில் பெண் சிசு உயிரிழப்பு

image

சேலம்: ஆத்துார்,முல்லைவாடி, வடக்குகாடு, சக்தி நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாலியான ஜெயவேல் (24). இவரது மனைவி 18 நாளுக்கு முன் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இந்தநிலையில் நேற்று, அந்த குழந்தைக்கு முச்சுத்திணறல் ஏற்படவே, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்ததாக தெரிவித்தார். இது குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!