News August 4, 2024
உங்கள் நண்பரை பற்றி கூறுங்கள்

சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. நம்ம வேலூர் மாவட்டத்தில் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, கிரிக்கெட் ஆடியது, பேருந்து நிறுத்ததில் அமர்ந்து அரட்டை அடிப்பது, தோழிகளுடன் செல்ஃபி எடுப்பதுஎன சினிமாவை மிஞ்சும் அளவுக்கு செய்த சேட்டைகளுன்டு. நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கு சேர் செய்யுங்க.
Similar News
News October 19, 2025
வேலூர் அருகே பைக் மோதிய விபத்தில் தொழிலாளி பலி

தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (50), தொழிலாளி. இவர், அக் 9-ம் தேதி அப்துல்லாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி நேற்று அக்.18 உயிரிழந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
News October 19, 2025
வேலூர்: சிறப்பு ஆட்டு சந்தை ரூ. 25 லட்சம் வரை வர்த்தகம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேட்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று (அக்.18) சிறப்பு ஆட்டு சந்தை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகள் குறைந்த பட்சம் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விலை போனது. மேலும் 25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
News October 19, 2025
வேலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டத்தில் அக்.18 இரவு 10 மணி முதல் அக்.19 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!