News January 19, 2026
உங்கள் தலையில் ₹1.94 லட்சம் கடன் சுமை

தேர்தலுக்காக பல இலவசங்கள் அடங்கிய வாக்குறுதிகளை அறிவிக்க DMK, ADMK கட்சிகள் தயாராகிவிட்டன. இதனிடையே, TN-ன் கடன் ₹9.29 லட்சம் கோடி என்றும், ஒவ்வொருவர் மீதும் தலா ₹1.94 லட்சம் கடன் சுமை உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 2016-21 ADMK ஆட்சியில் ₹4.80 லட்சம் கோடியாக இருந்த கடன், 4½ ஆண்டு DMK ஆட்சியில் ₹9.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே கவர்ச்சி அறிவிப்புகள் தேவையா என சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.
Similar News
News January 26, 2026
70% வரி குறைப்பு.. கார்கள் விலை குறைகிறது

இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. இதில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை கார்கள் மீதான வரி 110%-ல் இருந்து 40% ஆக குறைக்கப்படவுள்ளது. ₹16 லட்சத்துக்கு மேல் இறக்குமதி விலை உள்ள கார்களுக்கு இது பொருந்தும். இதனால் பென்ஸ், BMW உள்ளிட்ட கார்களின் விலை இந்தியாவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 26, 2026
இந்திய ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

காயம் காரணமாக NZ T20I தொடரில் இருந்து விலகிய, திலக் வர்மா 5-வது T20I-க்குள் முழு உடற்தகுதி பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. இதனால், அவர் வரும் பிப்ரவரி 4-ம் தேதி, SA-க்கு WC T20I பயிற்சி ஆட்டத்தில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. T20-ல் அசுர பலத்துடன் உள்ள அணிக்கு, திலக் வர்மாவின் வருகை மேலும் பலத்தை அதிகரிக்க செய்யும்.
News January 26, 2026
இந்தியாவின் சிறப்பு விருந்தினர்கள்.. யார் தெரியுமா?

இன்று டெல்லியில் நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இவர்கள் யார் என தெரியுமா? PM மோடிக்கு வலது புறமாக நிற்பவர் ஊர்சுலா வாண்டர் லியன்(67). ஜெர்மனி மருத்துவரான இவர், 2019-ம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உள்ளார். இடது புறம் உள்ளவர் அன்டோனியோ கோஸ்டா(64). போர்த்துகீசிய வழக்கறிஞரான இவர், 2024 முதல் ஐரோப்பிய கவுன்சில் தலைவராக உள்ளார்.


