News November 9, 2025
உங்கள் செல்போனில் உடனே இதை பாருங்க

➤Settings-ல் About device ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤version என்ற ஆப்ஷன் வரும், அதற்குள் சென்றால் Version Number இருக்கும் ➤அதை க்ளிக் செய்தால் developer option enable ஆகும் ➤மீண்டும் Settings-க்கு சென்று Additional Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤Developer option-ஐ க்ளிக் பண்ணி APPS ஆப்ஷனுக்குள் செல்லவும் ➤Dont Keep activities என்ற செட்டிங்கை ON பண்ணா Bg-ல் செயலிகள் இயங்காது. போனும் Hang ஆகாது. SHARE.
Similar News
News November 9, 2025
ஆபாச மார்பிங் போட்டோஸ்.. புகார் அளித்த அனுபமா!

போலி சோஷியல் மீடியா கணக்கு மூலம், தனது போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டவர் மீது நடிகை அனுபமா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்(20) ஒருவர்தான் அப்படி போட்டோக்களை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. அனுபமா மட்டுமின்றி, அப்பெண் பல பிரபலங்களின் பெயரிலும் போலி கணக்குகளை வைத்து, அதில் ஆபாசமான மார்பிங் போட்டோக்களை வெளியிட்டு வருகிறாராம்.
News November 9, 2025
Thar கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள்: போலீஸ்

நம்முடைய வாகனம் நாம் எப்படிப்பட்டவர் என்பதை காட்டுவதாக ஹரியானா DGP ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார். தார் காரை பார்த்தால் கண்டிப்பாக செக் செய்த பிறகே அனுப்புவோம் என்ற அவர், ரோட்டில் தேவையில்லாத ஸ்டண்ட்டுகள் செய்பவர்களே இதனை வைத்திருப்பதாக கூறினார். மேலும், சமீபத்தில் உதவி ஆணையரின் மகன் தார் காரில் விபத்தை ஏற்படுத்தியதாகவும், Thar கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் எனவும் பேசியுள்ளார்.
News November 9, 2025
தமிழ்நாட்டை சூழ்ந்திருக்கும் ஆபத்து: CM ஸ்டாலின்

தமிழ்நாட்டை SIR எனும் ஆபத்து சூழ்ந்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல கோடி மக்களின் வாக்குரிமையை SIR கேள்விக்குறியாக ஆக்கியுள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க கண்ணும் கருத்துமாக பணிபுரிய வேண்டும் என மா.செ.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து SIR-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


