News October 31, 2025
உங்கள் குழந்தை மண் சாப்பிடுதா? இதான் காரணம்!

கையில் கிடைப்பதை வாயில் போடும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்கும். அப்படி வாயில் போடும் பொருளில் சுவை இல்லை என தெரிந்தால் அதனை மீண்டும் செய்யாது. ஆனால் சில குழந்தைகள் மட்டும் மண், சாம்பலை அடிக்கடி உண்ணும். அப்படி செய்தால், உங்கள் குழந்தைக்கு வயிற்றில் பூச்சி தொல்லை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை இருக்கலாம் என டாக்டர்கள் சொல்றாங்க. உடனடியாக டாக்டரை அணுகுங்கள். குழந்தைகளை காக்கும், SHARE THIS.
Similar News
News November 1, 2025
சாதி அவமானகரமானது: மாரி செல்வராஜ்

சாதி என்பது பெருமை அல்ல, அது அவமானகரமானது என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்ற அதே நேரத்தில், மாரியின் படங்கள் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய மோதலை உருவாக்கும் வண்ணம் உள்ளதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி பேசியுள்ள அவர், போஸ்டர் ஒட்டி சாதிப் பெருமை பேசலாம், ஆனால் நான் சாதிக்கு எதிராக பேசக் கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 1, 2025
நவம்பர் 1: வரலாற்றில் இன்று

*1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
*1956 – கேரளா, ஆந்திரா, மைசூர் (கர்நாடகா) மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
*1956 -கன்னியாகுமரி, கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மெட்ராஸ் (தமிழ்நாடு) உடன் இணைந்தது.
*1959 – தியாகராஜ பாகவதர் நினைவுநாள்.
*1973 – ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள்.
*1974 – VVS லக்ஷ்மன் பிறந்தநாள்.
News November 1, 2025
SIR என்றாலே திமுகவுக்கு பயம்: நயினார் நாகேந்திரன்

‘SIR’ என்றாலே திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிடுகிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அண்ணா பல்கலை விவகாரத்தில் அந்த SIR-ஐ இதுவரை CM ஸ்டாலின் கண்டுபிடிக்கவில்லை என்றும் சாடினார். 2016 – RK நகர் இடைத்தேர்தலின்போது, போலி வாக்காளர்கள் உள்ளதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்கள் திமுகவினர் என்று சுட்டிக்காட்டிய நயினார், இன்று SIR-ஐ அவர்களே எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.


