News February 4, 2026

உங்கள் கருத்து சேலத்தின் எதிர்காலம்: கலெக்டர் அழைப்பு

image

சேலம் மாவட்டத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ‘தொலைநோக்கு 2030’ திட்டக் கலந்தாய்வுக் கூட்டம், வரும் 05.02.2026 அன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

Similar News

News February 13, 2026

சேலம் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியாகிறதா?

image

சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று (பிப்.13) தவெக கூட்டம் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் தவெகவின் பெரிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. எனவே இதில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளின் தவெக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படுமா? அதில் மாவட்ட செயலாளர்களே இடம் பெறுவார்களா? என விஜய்யின் உரையை தவெக தொண்டர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

News February 13, 2026

சேலம்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?

image

சேலம் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 13, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்

image

சேலம் மாவட்ட மக்கள் தங்கள் ரேஷன் கார்டு தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில், வருகின்ற பிப்.14-ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் போன்ற குறைகள் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

error: Content is protected !!