News January 26, 2026
உங்கள் உணவு இப்படியா வருகிறது?

உணவு டெலிவரிக்கு பயன்படும் கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்களால் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கின்றனர் டாக்டர்கள். மேலும், அதனால் ஹார்மோன் குறுக்கீடு, நரம்பு பாதிப்புகள், இதிலுள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கால் செல்களுக்கு சேதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஆகவே, உணவுகளை வைக்க ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் போன்ற உலோகப் பாத்திரங்களே சிறந்தவை.. SHARE IT
Similar News
News January 30, 2026
கணவர் ‘குரங்கு’ என்றதால் மாடல் அழகி தற்கொலை

குரங்கு மாதிரி இருக்கும் உனக்கு நடிப்பு தேவையா என கணவர் சொன்னதால் மனமுடைந்த நடிகை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவை சேர்ந்த தன்னு சிங்(23) மாடலிங், குறும்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், அவரது கணவர் ராகுல் ஸ்ரீவஸ்தா, தன்னு சிங்கை ‘Bandariya'(குரங்கு) என கேலி செய்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர், பெட்ரூமில் உயிரை மாய்த்துக்கொண்டாராம். யாரையும் உருவக்கேலி செய்யாதீங்க!
News January 30, 2026
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் வாய்ப்புகள் குறைவு: WHO

மேற்கு வங்கத்தில் 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பயப்பட வேண்டாம் என WHO கூறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 196 பேர் அடையாளம் காணப்பட்டு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டதாகவும், இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது. மேலும், பயண & வர்த்தக கட்டுபாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
News January 30, 2026
இந்த நதியில் விழுந்தால் வெந்து போவீர்கள்.. அதிசயம்!

ஒரு நதியை பார்த்தாலே அதிலுள்ள குளிர்ந்த நீரில் குளித்து மகிழவேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால், அமேசான் காட்டில் உள்ள Shanay-Timpishka எனும் இந்த நதி முற்றிலும் வித்தியாசமானதே. சுமார் 7 கி.மீ நீளமுள்ள இந்நதியின் வெப்பநிலை சுமார் 100 டிகிரி செல்ஷியஸாக இருக்கிறது. இதில் தப்பித்தவறி விலங்குகள் விழுந்தால் கூட அவை சில விநாடிகளில் உடல் வெந்து உயிரிழக்கும். இந்த அதிசயத்தை அனைவரும் அறிய SHARE THIS.


