News October 29, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 85577 மனுக்கள்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின், பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நகர் பகுதியில் 54 மற்றும் ஊரகப் பகுதியில் 131 முகாம்கள் என நடைபெற்றதில் 85577 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது இதில் 66975 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 30, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News October 29, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், துளசேந்திரபுரம் ஊராட்சிக்குட்பட்ட சமுதாயக்கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் பார்வையிட்டனர். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். துளசேந்திரபுரம் ஊராட்சி தலைவர் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

News October 29, 2025

திருவாரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!