News September 20, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 3,538 மனுக்கள்

திருச்சியில் இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. அதில் 3538 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. திருத்தாந்தோணி சாலையில் 1085 மனுக்களும், மேலசிந்தாமணியில் 891, கல்லக்குடியில் 361, அதவத்தூரில் 248, லால்குடியில் 480, தா.பேட்டையில் 93, துறையூரில் 522, புள்ளம்பாடியில் 699 மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
திருச்சி மக்களே இனி அலைச்சல் வேண்டாம்

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பள்ளி முதல் ஆதார், பாஸ்போர்ட் பெறுவதற்கு மிக முக்கியமானதாகும். பிறப்பு சான்றிதழ் பெற இனி அலைச்சல் வேண்டாம். புதிய சான்றிதழ் பெறுவதற்கும், தொலைந்த சான்றிதழ் பெறுவதற்கும்<
News September 19, 2025
திருச்சி: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

திருச்சி மக்களே, தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து உங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News September 19, 2025
திருச்சியில் குழந்தைகளுக்கு சதுரங்க பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், வரும் 21-ம் தேதி மாலை 3.30 முதல் 5.30 மணி வரை, சதுரங்க பயிற்சி நடைபெற உள்ளது. மாவட்ட சதுரங்க சங்க இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் பயிற்சி அளிக்கிறார். குழந்தைகள் சதுரங்க போர்டுடன் கலந்து கொள்ளலாம். முன்னதாக காலை 10.30 முதல் 11.30 மணி வரை, சதுரங்க பயிற்சியாளர் சங்கரா நடத்தும் வாராந்திர பயிற்சியும் நடைபெற உள்ளது என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.