News August 7, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், மணலூர்பேட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டாரங்களில் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்கலாம். வருமானச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உட்பட 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை மக்கள் பெறலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News August 7, 2025
கள்ளக்குறிச்சி: தாசில்தார் மீது புகாரளிப்பது எப்படி….?

கள்ளக்குறிச்சி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார்&அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம்(04151-294600)புகாரளிக்கலாம். *இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்*
News August 7, 2025
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் இன்றைய விலை

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (ஆகஸ்ட்-7) வெளியிடப்பட்ட விலை நிலவரப் பட்டியலின்படி, எள் அதிகபட்சமாக ரூ.8,680-க்கும், மக்காச்சோளம் ரூ.2,529-க்கும், மணிலா அதிகபட்சமாக ரூ.8,420-க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
News August 7, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், பாலின நிபுணர்கள், கணக்கு உதவியாளர், கணக்கு தரவு பதிவாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான தகுதி, விண்ணப்ப படிவம், படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி ஆகியவற்றை இந்த <