News September 9, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரம் வேப்பங்குளம் பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் (செப்டம்பர் 10) ஆம் தேதி புதன்கிழமை வேப்பங்குளம், ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது மனுக்களை கொடுத்து அரசின் நலத்திட்டங்களில் பங்கு கொண்டு பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News September 10, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
பள்ளி தேர்ச்சி சதவீதம் குறித்த ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
News September 9, 2025
தஞ்சாவூர்: 999.64 கிலோ கஞ்சா பொருள்கள் எரிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டி மெடி கேர் என்விரோ சிஸ்டம் எனப்படும் மருத்துவக் கழிவு பொருள்களை எரித்து அழிக்கும் இடத்தில், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் முன்னிலையில் 999.64 கிலோ பொருள்களை இன்று எரியூட்டி போலீஸார் அழித்தனர். தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர். இராஜாராம், துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.