News September 4, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் தனியார் மஹால், அரிமளம் கீழப்பனையூர் சமுதாயக்கூடம், அன்னவாசல் கீழக்குறிச்சி சமுதாயக்கூடம், விராலிமலை மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இன்று (செப்.4) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. இதில், 15 அரசு துறைகள் சார்பில் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 7, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,6) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News September 6, 2025
பொன்னமராவதி: மருத்துவ முகாம்; ஆட்சியர் உத்தரவால் பந்தல்

பொன்னமராவதியில், தமிழக அரசின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தபோது, வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் காத்திருப்பதற்குப் போதிய இடவசதி இல்லாததால் சிரமப்படுவதைக் கண்டார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து, பொதுமக்கள் அமர்வதற்குப் பந்தல் அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, உடனடியாகப் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
News September 6, 2025
புதுக்கோட்டை: ஆயுதத் தொழிற்சாலையில் வேலை

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் <