News December 20, 2025
உங்களுக்கு இரண்டு இதயம் இருக்கு தெரியுமா?

கெண்டைக்கால் தசைகள், குறிப்பாக சோலியஸ் தசை தான் நமது உடலில் உள்ள 2-வது இதயம் என அழைக்கப்படுகிறது. இதயத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரத்தம், புவி ஈர்ப்பு விசையால் கால்களில் தேங்கிவிடாமல் உடல் முழுக்க சீராக அனுப்பும் பணியை இது செய்கிறது. இதனால், இதயத்தின் வேலைப்பளு குறைவதோடு, அதன் ஆயுளும் நீள்கிறது. எனவே, இந்த 2ம் இதயம் சீராக இயங்க உடற்பயிற்சி செய்வது அவசியமாகிறது. SHARE.
Similar News
News January 8, 2026
வரலாற்றில் இன்று

*1642 – வானியலாளர் கலிலியோ கலிலி மறைந்தார்
*1828 – அமெரிக்காவில் ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டது.
*1942 – இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்ததினம்
*1973 – ரஷ்யாவின் லூனா 21 விண்கலம் விண்ணில் பாய்ந்தது
*1986 – கன்னட நடிகர் யஷ் பிறந்ததினம்
*2003 – துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியதில் 70 பேர் பலியாகினர்.
News January 8, 2026
பிக்பாஸில் ₹7 லட்சத்துடன் வெளியேறிய சபரி?

பிக்பாஸ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யார் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே, ₹7 லட்சம் பணப்பெட்டியுடன் சபரி வீட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் டைட்டில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு குறைவே என கருதி அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி இன்று புரொமோ வெளியாக வாய்ப்புள்ளது. யார் டைட்டில் வெல்வார்கள்? சொல்லுங்க
News January 8, 2026
நெயில் பாலிஷ் பிரியர்களுக்கு எச்சரிக்கை!

நெயில் பாலிஷ் என்றால் பெண்களுக்கு அலாதி பிரியம். ஆனால் இதற்கு ஐரோப்பிய நாடுகளில் தடை உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். குறிப்பாக ஜெல் நெயில் பாலிஷ் வகைகளில் உள்ள ஃபார்மால்டிஹைடு, தொலுவென் போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்கள் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் அதில் உள்ள ரசாயனம் ஸ்கின்னுக்குள் ஊடுருவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.


